நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது SIR எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடர்பாக செய்தியாளர் ஒருவர் சீமானிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால் திடீரென ஆவேசம் அடைந்த சீமான், எழுந்து நின்று, டேய் மரியாதையா கேள்வி கேளுடா… போடா.. ஒரு மைக், கேமிராவ தூக்கிட்டு வந்தா பெரிய வெங்காயமா நீ, ஆளையும் முகரையும் பாரு. போடா” என்று கூறியதால் அங்கு சலசலப்பு நிலவியது.
சீமான் செய்தியாளரை ஒருமையில் பேசியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
