தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு விநியோகத்தைக் குறித்து அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 17 லட்சத்து 70 ஆயிரத்து 796 புதிய மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் தற்போதைய அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு மிக விரைவில் கார்டுகள் வழங்கப்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கான செயல்முறைகள் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைன் வழி:
தமிழ்நாடு அரசின் பொதுவிநியோகத்துறை tnpds இணையதளத்தில் சென்று “புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க” என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
குடும்பத் தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை நிரப்பி, ஆதார், புகைப்படம், மின்கட்டண ரசீது போன்ற முகவரி ஆதார ஆவணங்களின் நகலை பதிவேற்ற வேண்டும்.
மொபைல் எண் கட்டாயமாக வழங்கப்பட வேண்டும். விண்ணப்பத்தை சமர்ப்பித்ததும், ரெஃபரன்ஸ் நம்பர் கிடைக்கும், அதன் மூலம் நிலையை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
ஆப்லைன் வழி:
அருகிலுள்ள இ-சேவை மையங்களில் தேவையான ஆவணங்களை கொடுத்து விண்ணப்பிக்கலாம். அல்லது பொதுவிநியோக குறைதீர் முகாம்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் முகாம்களில் மனு அளித்து புதிய குடும்ப அட்டைக்காக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம், ஆவணங்கள் மற்றும் கால அவகாசம்
விண்ணப்பிக்கும் போது சரியான மற்றும் உண்மை ஆவணங்களை சமர்ப்பிப்பது மிகவும் முக்கியம். பொதுவாக புதிய ரேஷன் கார்டு வழங்க 15 முதல் 30 நாட்கள் வரை ஆகலாம். இது விண்ணப்பம் சரிபார்க்கப்படும் வேகத்தைப் பொறுத்து மாறுபடும். ஆவணங்கள் சரியாக இருந்தால், கார்டு வழங்கும் செயல்முறை மேலும் விரைவாகும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
