Thursday, December 25, 2025

100 ரூபாயை நெருங்கும் தக்காளியின் விலை : இல்லத்தரசிகள் அதிர்ச்சி

வழக்கமாக கோயம்பேடு சந்தைக்கு தினமும் சுமார் 700 டன் தக்காளி வரும் நிலையில், தற்போது அது 300 டன் அளவுக்கு மட்டுமே குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாக மொத்த விற்பனையில் கிலோ 50 ரூபாய் இருந்த தக்காளி 10 ரூபாய் உயர்ந்து 60 ரூபாயாக விற்கப்படுகிறது. சில்லறை சந்தையில் கிலோவுக்கு 80 ரூபாயிலிருந்து 90 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தக்காளியுடன் சில காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளன. அவரைக்காய் கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து 60 ரூபாயாக உள்ளது. முருங்கைக்காய் 230 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக சென்றுள்ளது. அதே நேரத்தில், ஊட்டி கேரட் 10 ரூபாய் குறைந்து 40 ரூபாய்க்கும், கேரட் 10 ரூபாய் குறைந்து 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெங்காயம் கிலோவுக்கு 30 ரூபாய், கர்நாடகா வெங்காயம் 28 ரூபாய், உருளைக்கிழங்கு 45 ரூபாய், சின்ன வெங்காயம் 80 ரூபாய், பீன்ஸ் 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

முள்ளங்கி 35 ரூபாய், காலிஃபிளவர் 30 ரூபாய், முட்டைக்கோஸ் 30 ரூபாய், கத்திரிக்காய் வகைகள் 20–30 ரூபாய்க்கு, பாவக்காய், புடலங்காய், சுரைக்காய், சேனைக்கிழங்கு ஆகியவை 30–40 ரூபாய் வரம்பில் உள்ளன.

பூசணிகள் மற்றும் பச்சை காய்களிலும் மிதமான விலை நிலவரம் பதிவாகியுள்ளது. பச்சை மிளகாய் 40 ரூபாய், பட்டாணி 90 ரூபாய், இஞ்சி 70 ரூபாய், பூண்டு 110 ரூபாய், மஞ்சள் பூசணி 15 ரூபாய், வெள்ளை பூசணி 20 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. கொத்தவரங்காய், கோவைக்காய், நூக்கல், பீர்க்கங்காய் போன்றவை கிலோவுக்கு 30–40 ரூபாய்; கீரை வகைகள் 20 ரூபாய், மாங்காய் 40 ரூபாய் என உள்ளன.

தேங்காய் விலையும் சற்று அதிகரித்த நிலையில் தொடர்கிறது. பொள்ளாச்சி தேங்காய் ஒன்று 67 ரூபாய்க்கும், உடுமலைப்பேட்டை தேங்காய் 62 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

குடைமிளகாய் கிலோவுக்கு 60 ரூபாய், வண்ண குடைமிளகாய் 140 ரூபாய், கொத்தமல்லி கட்டு 6 ரூபாய், புதினா 3 ரூபாய், கருவேப்பிலை 50 ரூபாய் என்ற விலையில் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் இன்று விற்பனை செய்து வருகின்றனர்.

Related News

Latest News