காசாவின் நிலத்தடியில் இஸ்ரேல் கண்ட அதிர்ச்சி! வெளியான வீடியோ வைரல்!

ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் 2023 அக்டோபர் 7 முதல் இன்றுவரை தொடர்ந்துவருகிறது. காசா பகுதியில் இருந்து தாக்குதலில் ஈடுபடும் ஹமாஸ் போராளிகள் பெரும்பாலும் நிலத்தடி சுரங்கங்களைப் பயன்படுத்தி தப்பிச் செல்வதும், நடவடிக்கைகளையும் அங்கிருந்தே மேற்கொள்வதும் வழக்கமாகும். காசாவின் பல வீடுகளின் அடிப்பகுதியில் இவ்வகை சுரங்கங்கள் அமைக்கப்பட்டு இருப்பது இஸ்ரேல் இராணுவத்திற்கே சவாலாக இருந்து வருகிறது.

இஸ்ரேல் படை கடந்த சில மாதங்களாக இந்த சுரங்கங்களை ஒன்றன்பின் ஒன்றாக தேடி அழித்துவருகிறது. இப்படியான சூழலில், தெற்கு காசா எல்லையில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய மற்றும் சிக்கலான சுரங்கத்தை இஸ்ரேல் படையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுரங்கம் தரைக்கு கீழ் 25 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. சுமார் 7 கிலோமீட்டர் நீளமுடைய இந்த அமைப்புக்குள் 80க்கும் மேற்பட்ட தனித்தனி அறைகள் இருப்பதும் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுரங்கத்தின் உள்புற காட்சிகளை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளது. அத்துடன், அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சுரங்கம் ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய அடிப்படை மையமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஹமாஸ் கையில் பல இஸ்ரேல் பிணைக்கைதிகள் இருப்பது தெரிந்த தகவல். அவர்களில் இஸ்ரேல் படைவீரர் ஹடார் கோல்டின் என்பவரும் ஒருவர். அவர் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டது மட்டுமன்றி அவரது உடலும் இந்த சுரங்கத்துக்குள்ளேயே மறைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேல் தரப்பு குற்றம் சாட்டுகிறது. கடந்த வாரத்தில் கோல்டின் உடலை ஹமாஸ் இஸ்ரேலுக்கு மீட்டு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த மாபெரும் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டதுடன், காசா நிலத்தடியில் இன்னும் பல மறைமுக வழிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News