சென்னை கோயம்பேடு சந்தைக்கு தினந்தோறும் டன் கணக்கில் தக்காளிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். மழை எதிரொலியாக இன்றைய தினம் தக்காளி வரத்து வழக்கத்தைவிட குறைவாக காணப்பட்டது. அதுமட்டுமின்றி கொண்டுவரப்பட்ட தக்காளிகளில் பெரும்பாலான தக்காளிகள் சேதமடைந்து இருந்ததால் அவற்றை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலையானது சட்டென உயர்ந்துள்ளது. மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி அறுபது ரூபாய்க்கும், சில்லறை விலையில் 80 ரூபாய்க்கும் அதற்கு மேலும் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தக்காளியின் வரத்தை பொறுத்து விலை ஏற்றம் அல்லது குறைவு இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
