இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.இதில் 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில், மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான மந்தனா, பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா நாளை (23-ந்தேதி) அவரை கரம் பிடிக்கிறார்.
இதற்கிடையே, இவர்களது திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம் அனுப்பினார். நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் ஸ்மிருதி மந்தனாவின் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் தொடங்கி உள்ளன. அந்த வகையில் வட இந்திய பாரம்பரியமான திருமணத்துக்கு முந்தைய ஹல்தி நிகழ்ச்சி நேற்று மாலை ஸ்மிருதி மந்தனாவின் வீட்டில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
