அரியலூரில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் அளித்த பேட்டி: ஓர் அரசியல் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவது மக்கள் சக்தி. மக்கள் வாக்களித்து தான் ஓர் இயக்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் பஞ்சாங்கத்தை பார்த்து இந்த கட்சி ஆட்சிக்கு வரும், அந்தக் கட்சி ஆட்சியை இழக்கும் என நயினார் நாகேந்திரன் சொல்லி இருப்பது நகைப்புக்குரியது.
இதனிடையே மல்லை சத்யா தொடங்கிய கட்சியின் பெயர் மற்றொரு நபர் பதிவு செய்த கட்சி பெயர் என கூறப்படுவது குறித்த கேள்விக்கு, “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரைக்கும் திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். கட்சி பெயரைக் கூட இன்னொரு கட்சி பெயரை களவாடி வைத்துள்ளார்கள். அந்த பெயரைக் கூட எனக்குச் சொல்லப் பிடிக்காது” என்றார்.
