Thursday, December 25, 2025

கரூர் காவலர் தனது குழந்தையுடன் பிச்சை எடுத்த அவலம்!!

கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலர் பிராபகரன். இவர் தற்பொழுது பணி இடைநீக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாக வேலையில்லாமல் உள்ளார். இந்த நிலையில் இன்று தனது சிறு வயது மகனுடன் கரூர் வெண்ணெய் மலை முருகன் கோயிலுக்கு வந்தவர் கோவில் அருகே உள்ள மரத்தடியில் அமர்ந்து யாசகம் எடுக்க முயன்றார். இதனை அப்பகுதியில் ஈடுபட்டிருந்த சக காவலர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்து பிரபாகரனை சமாதானம் செய்து அழைத்து சென்றனர்.

இது குறித்து பிராபகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது. என் பெயர் பிரபாகரன். நான் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறேன். என் மேல் போடப்பட்ட ஒரு பொய் வழக்கு காரணமாக சஸ்பண்ட் செய்யப்பட்டு 2 அரை மாத காலமாக வேலையும் வருமானமும் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகிறேன். என் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழியின்றி கோவில் முன்பு யாசகம் எடுக்க வந்தேன் என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

Related News

Latest News