ஃப்ரைட் ரைஸ் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக மாறியுள்ளது. ஆனால் இந்த உணவை அடிக்கடி வாங்கி சாப்பிடுவது உடல்நலத்திற்கு பல வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சாலையில் விற்கப்படும் ஃப்ரைட் ரைஸ் அதிக எண்ணெய் மற்றும் உப்புடன் செய்யப்படுவதால் இரத்த கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும், உயர் இரத்த அழுத்தம் உண்டாக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது.
அதிக எண்ணெய், உப்பு சேர்த்து தயாரிப்பதால் வயிற்று, குடல் மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும்.
கார்போஹைட்ரேட் அதிகமுள்ளதால், எடை அதிகரிப்பு, உடல் பருமன் ஏற்படும். சிக்கன், மட்டன், பிராய்லர் கோழி போன்ற இறைச்சிகள் உத்தரவாதமில்லாத முறையில் தயாரிப்பதால் கூடுதல் அபாயம் ஏற்படும்.
இதய நோய், உயர் இரத்த அழுத்தம், விரைவில் கூடுதல் எடை குறைக்க விரும்பும்வர்கள் சாலைகளில் விற்கும் ஃப்ரைட் ரைஸ் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஃப்ரைட் ரைஸ் சாப்பிட விரும்புபவர்கள் குறைந்த எண்ணெய், உப்பு பயன்படுத்தி வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது.
ஃப்ரைட் ரைஸ் ஒரு சுவையான உணவு என்றாலும், அடிக்கடி மற்றும் அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
