பா.ம.க.வில் தந்தை, மகன் அதிகார மோதலை தொடர்ந்து ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், அன்புமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது.
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து இருவரும் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருன்றனர். தங்களுக்கு தான் மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என இரு அணியினரும் தனித்தனியாக தேர்தல் கமிஷனுக்கு மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், ராமதாஸ் தரப்பினர் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ம.க.வை கைப்பற்றும் சட்ட போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் விதமாக ‘அய்யா பா.ம.க.’ என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் ஒரு கட்சியின் நிறுவனராக இருப்பதால் அவர் பெயரில் புதிய கட்சியை பதிவு செய்ய முடியாது என்பதால் ஆதரவாளர் பெயரில் தொடங்க திட்டம் எனவும் கூறப்படுகிறது.
