கள்ளக்குறிச்சியில் இருந்து – சென்னை அடையார் நோக்கிச் சென்ற அரசு பேருந்து உளுந்தூர்பேட்டை பேருந்து நிலைய பகுதியில் பழுதாகி நடுரோட்டில் நின்றது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்க முயற்சி செய்தும் பலன் அளிக்காததால் பயணிகள் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் பின்பக்கத்தில் தள்ளு தள்ளு என்று கூறி தள்ளிய பிறகு பேருந்து திடீரென புறப்பட்டது.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேருந்து நடுரோட்டில் இருந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர். பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் பேருந்தை தள்ளு தள்ளு என்று கூறி தள்ளி அதன் பிறகு பேருந்து இயங்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிக அளவில் பரவி வருகிறது.
