ராமேஸ்வரம் முதல் மதுரை வழியாக இயக்கப்படவிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் குறித்து புதிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த ரெயில் காரைக்குடி வழியாக இயக்கப்பட இருக்கிறது என்று தற்காலிக நேர அட்டவணை வெளியாகியுள்ளது.
இந்த அட்டவணைப்படி, ரெயில் ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் (மாலை 3.15), சிவகங்கை (மாலை 4.10), காரைக்குடி (மாலை 4.40), புதுக்கோட்டை (மாலை 5.10), திருச்சி (மாலை 6.10), விழுப்புரம் (இரவு 8.15), தாம்பரம் (இரவு 9.40) வழியாக பயணம் செய்து, இரவு 10.20 மணிக்கு சென்னை சென்றடையும்.
இதேபோன்று மறுமார்க்கத்தில், ரெயில் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும். தாம்பரம் (அதிகாலை 5.52), விழுப்புரம் (காலை 7.20), திருச்சி (காலை 9.20), புதுக்கோட்டை (காலை 10.00), காரைக்குடி (காலை 10.40), சிவகங்கை (நண்பகல் 11.15), ராமநாதபுரம் (மதியம் 12.15) வழியாக பயணம் செய்து, மதியம் 1.15 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் இயக்கப்பட உள்ளது. எனினும், ரெயில் சேவை தொடங்கிய பின் நிறுத்தங்கள் மற்றும் நேரங்களில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
