கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தில் செலுத்த 7 கோடியே 11 லட்சம் ரூபாய் பணத்துடன் சி.எம்.எஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது.
அப்போது, திடீரென சொகுசு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல் நாங்கள் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எனக் கூறி, CMS வாகனத்தை நிறுத்தியுள்ளனர். பிறகு ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என வாகனத்தில் இருந்த ஊழியர்களை அந்த கும்பல் கீழே இறங்க வலியுறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அவர்களும் வாகனங்களில் இருந்து இறங்கியுள்ளனர். அப்போது இவர்களுடன் பேசிக் கொண்டு இருக்கும் போதே அந்த கும்பல் சி.எம்.எஸ் வாகனத்தில் ஏறி, பணத்துடன் இருந்த வாகனத்தை கடத்தி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக சி.எம்.எஸ் ஊழியர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறியுள்ளது. இதனால், பெங்களூரு முழுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
