நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க. 101 தொகுதிகளில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதே கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் பீகார் முதலமைச்சராக 10-வது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் பங்கேற்றனர்.
