கோவை குனியமுத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட குறிச்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
சிட்கோ, போத்தனூர், குறிச்சி, ஹவுசிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி., மலுமிச்சம்பட்டி, சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளா புரம், ராமாட்சியம்பாளையம், தொட்டிபாளையம், செந்தில்நகர், பரமசிவம் பாளையம், கணியூர் ஒரு பகுதி, கருமத்தம்பட்டி, ராயர்பாளையம்,தண்ணீர் பந்தல், எலச்சிபாளையம், செகுடந் தாளி, காளிபாளையம் ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது.
