Monday, December 22, 2025

எடப்பாடி போடும் மாஸ்டர் பிளான்! மோடியிடம் பதுங்கி அமித் ஷாவிடம் பாய்ச்சல்! விழி பிதுங்கும் திமுக அமைச்சர்கள்?

நடப்பு அரசியல் சூழலில், பாஜகவின் கவனம் இனி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் மீதும் இருக்கும் எனவும், டிசம்பர் மாதத்தில் திமுக அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து நடவடிக்கைகள் ஆரம்பமாகும் எனவும் பாஜக மேலிடத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சட்டமன்றத் தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பே, அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி, அமித் ஷாவிடம் சில கோரிக்கைகள் வைத்திருந்தார். அதில் முக்கியமானது, திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை விரைவாக தொடர வேண்டும் என்பது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில், வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகள் மூலமாக திமுகவினரின் தேர்தல் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையாக இருந்தது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பின்னர், அதிமுக தொடர்ந்து இந்த அதிருப்தியை பாஜக டெல்லி தலைமைக்கு தெரிவித்தது. இதனால், இப்போது தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கம் மீதும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக, டிசம்பரில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென பாஜக உத்தரவளித்துள்ளது.

இந்நிலையில், கோவை வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்தில் வரவேற்றார். அவர் மோடியிடம் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் மனுவாக வழங்கியுள்ளார். இதில், நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22% உயர்த்தி அறிவித்தல், தமிழக மீனவர்களை இலங்கை சிறைகளில் இருந்து விடுவித்தல் போன்ற கோரிக்கைகள் அடங்கும்.

எடப்பாடி பழனிசாமி, இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ‘எடப்பாடியாரின் ஆட்சிக் காலம், தமிழ்நாட்டின் வளர்ச்சிக் காலம்’ என தேர்தல் நேரத்தில் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்று எண்ணுகிறார்.

Related News

Latest News