கம்பீரின் பயிற்சியில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வருகிறது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகளிடம் இந்தியா தோல்வி அடைந்த நிலையில், வங்கதேசம் மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மட்டுமே தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால், சமூக வலைதளங்களில் கம்பீர் பயிற்சியாளர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்த சர்ச்சை குறித்து முன்னாள் வீரரும் பெங்கால் வாரியத் தலைவருமான செளரவ் கங்குலி விளக்கம் வழங்கியுள்ளார். “பிட்ச் சிறந்ததாக இல்லாதது உண்மைதான். ஆனால் கெளதம் கம்பீர் பதவியில் இருந்து விலக வேண்டியதில்லை. சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி உள்ளது. விரைவில் இந்திய மண்ணிலும் அதே திறமையை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
