திருச்சியில் நாளை {20.11.2025} வியாழக்கிழமை அன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பின்வரும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கருதி மின்விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. அதன்படி, நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம் தற்போது பார்க்கலாம்.
அதன்படி தமிழ்நாடு சிறப்பு காவல் படை, கிராப்பட்டி காலனி, அன்புநகர், அருணாச்சல நகர், காந்திநகர், பாரதிமின்நகர், சிம்கோ காலனி, ஸ்டேட் வங்கி காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டி புதூர், அரசு காலனி, ராமச்சந்திரா நகர், ஆர்.எம்.எஸ். காலனி, கே.ஆர்.எஸ். நகர், ராஜீவ் காந்தி நகர், கிருஷ்ணாபுரம், செட்டிய பட்டி, அன்பிலார் நகர், ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
