சத்தீஸ்கரில் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் இருந்து வெளியாகி உள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே அடிப்படை கற்றல் கூட தெரியாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கமலேஷ் பாண்டே என்ற அந்த ஆசிரியர், தொடக்கப் பள்ளியில் ஆங்கில வகுப்பை எடுக்கிறார். அப்போது, Friday-க்கு பதில் FarDay, என்றும் Saturday-க்கு பதில் Saterday என்றும் பலகையில் எழுதுகிறார். Father, Mother, Brother, Sister என்று குடும்ப உறுப்பினர் சொற்களுக்கு முறையே Farder, Mader, Barpr, Sester என்றும், அதேபோல் Nose, Ear, Eye-க்கு பதில் Noge, eare, iey என்று கரும்பலகையில் எழுதி சொல்லிக்கொடுக்கிறார்.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், சத்தீஸ்கரில் உள்ள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது.
