பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் ஐக்கிய ஜனதா தள சட்டமன்ற கட்சித் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட இருக்கிறார். அதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டதில் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
