இயக்குனர் ஷங்கரை தொடர்ந்து பிரம்மாண்ட இயக்குநர் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் ராஜமௌலி. தற்போது இவரது இயக்கத்தில் அடுத்ததாக வாரணாசி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது.
‘வாரணாசி’ பட விழாவில், பேசிய ராஜமௌலி, கடவுள் மீது அதிக நம்பிக்கை இல்லை என்றும், அனுமன் துணை நிற்பார் என தந்தை கூறியபோது கோபம் வந்ததாகவும் ராஜமெளலி கூறினார். ராஜமௌலியின் பேச்சு இந்துக்கள் மனதைப் புண்படுத்தியதாக ‘ராஷ்ட்ரிய வனரசேனா’ அமைப்பு சரூர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திரைப்படங்களில் இந்து கடவுள்களை அவமதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மத நம்பிக்கைகளை புண்படுத்துவது சட்டப்படி தவறு என்பதால், ராஜமௌலி மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
அடுத்த பிரச்சனை என்னவென்றால் வாரணாசி என்ற தலைப்பு எங்களுடையது என்று கூறி திரைப்பட சபையில் ராமபிரம்ம ஹனுமா கிரியேஷன்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. வேறு படத்திற்கு பதிவு செய்த தலைப்பை அனுமதியின்றி எப்படிப் பயன்படுத்தலாம் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் வாரணாசி படத்தின் தலைப்பு மாற்றப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
