தருமபுரி மாவட்டம் அரூரில் வசித்து வந்த மகாலட்சுமிக்கும், பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
4 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. பொறுமையை இழந்த வெங்கடேஷ், மகாலட்சுமியின் வாயில் துணியை அடைத்து கத்தியால் கழுத்தை அறுத்து கை, கால்களை வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வெங்கடேஷன் அங்கிருந்து தப்பியோடினார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தலைமறைவான வெங்கடேஷை போலீசார் கைது செய்தனர். விசாரணையின் முடிவிலேயே கொலைக்கான உண்மை காரணம் என்ன என்பது குறித்து தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
