திருச்சி மற்றும் சிங்கப்பூருக்கு இடையே விமான சேவை வாரத்திற்கு 30 சேவைகள் இருந்த நிலையில், தற்போது நான்கு புதிய நேரடி விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், வாரத்திற்கு மொத்தம் 34 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த புதிய சேவைகளை இண்டிகோ நிறுவனம் திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்குகிறது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து காலை 10.05 மணிக்கு இந்த விமானம் புறப்படும். சிங்கப்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.
இந்த புதிய விமான சேவைகள், திருச்சி மக்களின் வெளிநாட்டு பயணத்தை மேலும் எளிதாக்கும். குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் செல்ல விரும்புவோருக்கு இது ஒரு வரப்பிரசாதம் என கூறப்படுகிறது.
