இன்று (நவ. 18) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று(நவ. 18) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுவை மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
