Friday, December 26, 2025

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு 23-ந்தேதி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related News

Latest News