ஏர்டெல் (Airtel) தொடர்ந்து குறைந்த செலவில் அதிக டேட்டா மற்றும் பல சலுகைகளுடன் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது, தற்போது ஏர்டெல் நிறுவனம் வழங்கும் மூன்று பிரபல திட்டங்களே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளன.
ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.449 திட்டம் தினமும் 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள். அதாவது மொத்தமாக 112 ஜிபி டேட்டா கிடைக்கும். தினசரி டேட்டா முடிந்ததும் இணைய வேகம் 64 kbps ஆக குறையும். இதோடு, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் வசதி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் ப்ளே (Lionsgate Play) போன்ற 22 ஓடிடி ஆப்களைப் பயன்படுத்தலாம். கூடுதலாக, 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்கப்படுகிறது.
ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தில் தினம் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதால் மொத்தம் 112 ஜிபி டேட்டா கிடைக்கும். டேட்டா முடிந்ததும் வேகம் 64 kbps ஆக குறையும். அவ்வாறே, அன்லிமிடெட் குரல் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஹலோடியூன்ஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) போன்ற பல நன்மைகளும் இதில் உள்ளன.
ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 56 நாட்கள் செல்லுபடியாக இருப்பதால் மொத்தம் 168 ஜிபி டேட்டா கிடைக்கும். இதில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள் வசதி உள்ளது. மேலும், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ சேவைகள் வழங்கப்படுகின்றன.
மேலும், இந்த திட்டம் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (Amazon Prime Membership) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தாவையும் வழங்குகிறது. இதன் மூலம் மொத்தம் 22 ஓடிடி ஆப்களைப் பயன்படுத்த முடியும்.
