Saturday, December 20, 2025

பாகிஸ்தான் அரசை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

பாகிஸ்தானில், அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர்.

பாகிஸ்தானின் 27-வது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதனால், வழக்குகளை தானாக முன்வந்து விசாரித்தல், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும், கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என்றும், சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில், பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் அதிகாரம் பறிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பை அறிவித்துள்ளனர்.

Related News

Latest News