குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வருடமாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்த சாஜன் பரையா (25) மற்றும் சோனி ரத்தோட் (23) ஆகியோரின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெறவிருந்தது. திருமண முகூர்த்தத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரவு 9 மணிக்கு, சாஜன், சோனிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாஜன், இரும்பு கம்பியால் சோனியின் கைகளிலும் கால்களிலும் அடித்துள்ளார். இதில் மணப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவத்துக்குப் பிறகு சாஜன் உடனே அங்கிருந்து தப்பியோடினார். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை பிடிக்க சிறப்பு போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாவ்நகர் நகர போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
திருமணம் நடக்க வேண்டிய நாளே இந்த கொடூரம் நிகழ்ந்தது உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
