Friday, December 26, 2025

சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து டீசலை அள்ளிச் சென்ற பொதுமக்கள்

திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, அதே லாரி மோதியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

கனகாம்பரம் (70) என்ற அந்த மூதாட்டி, திருவண்ணாமலை அடுத்த அரசம்பட்டில் லாரி வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றுள்ளார். மூதாட்டி மீது லாரி மோதாமல் இருக்க லாரியை திருப்பியபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி மூதாட்டி மீது மோதி கவிழ்ந்தது. இதில் மூதாட்டி கனகாம்பரம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்தில் லாரி கவிழ்ந்து டீசல் ஆறாக ஓடியது. இதனை கண்ட பொதுமக்கள் மக்கள் கேன், குடம் உள்ளிட்டவற்றில் டீசலை நிரப்பிச் சென்றனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related News

Latest News