Monday, January 26, 2026

பைசன் ஓடிடி ரிலீஸ் தேதி : வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘பைசன்’. இந்த திரைப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கபடி வீரரின் வாழ்க்கை இப்படத்தில் கதைக்களமாக அமைந்துள்ளது. உலகளவில் படம் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பைசன் திரைப்படம் வரும் நவ. 21 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News