திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் அதிக தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக இபிஎஸ் நிரூபித்தால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக செல்வப்பெருந்தகை சவால் விடுத்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, அதிமுக ஆட்சியில் தான் அதிக தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாக நிரூபிக்க தவறினால் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது எனவும், இந்த கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும் என்றும் தெரிவித்தார். திமுக கூட்டணிக்கு எதிரான வாக்குகளை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரிக்கும் எனவும் செல்வப்பெருந்தகை கூறினார்.
