Friday, December 26, 2025

‘யுனிசெப்’ இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

குழந்தைகள் உரிமைக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷை ‘யுனிசெப்’ இந்தியா அமைப்பு நியமித்தது. ”யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்” என கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்த பதிவில் கீர்த்தி சுரேஷ், “குழந்தைகள்தான் நமது மிகப்பெரிய பொறுப்பு மற்றும் நம்பிக்கை. இந்தியாவில் குழந்தைகளுக்கான யுனிசெஃப் தூதராக இணைவதில் பெருமை கொள்கிறேன்.

ஆரோக்கியமாக வளரவும், கற்றுக் கொள்ளவும், கனவு காணவும் ஒவ்வொரு குழந்தைக்கும் தகுதியுண்டு. இதனை நனவாக்கவே கடந்த 76 ஆண்டுகளாக யுனிசெஃப் உழைத்து வருகிறது. இந்தப் பணியில் ஒரு பகுதியாக நானும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related News

Latest News