Saturday, December 27, 2025

பீகாரில் வெற்றி பெற்ற 90 சதவீத MLA-க்கள் கோடீஸ்வரர்கள் : ஜனநாயக சீர்திருத்த அமைப்பு

பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 90 சதவீத MLA-க்கள் கோடீஸ்வரர்கள் என்று ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது.

பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. எதிர்க்கட்சி கூட்டணி யாரும் எதிர்பாராத அளவுக்கு படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் பீகாரில் 111 MLA-க்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற 90 சதவீத MLA-க்கள் கோடீஸ்வரர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பீகாரில் மொத்தம் உள்ள 243 MLA-க்களில் 218 பேர் கோடீஸ்வரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கோடீஸ்வரர்களில், ஐக்கிய ஜனதா தளம் 78 பேருடன் முதல் இடத்திலும், பா.ஜ.க. 77 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

MLA-க்களின் மொத்த சொத்து மதிப்பு 2 ஆயிரத்து 193 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 102 MLA-க்கள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாகவும், ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related News

Latest News