பீகாரில் 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கு கடந்த 6 மற்றும் 12 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஜேடியு JD(U), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.
பாஜக 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல நாட்டுப்புற பாடகர் மைதிலி தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் காரணமாக 25 வயதே ஆன இவர் பீகாரின் இளம் MLA-வாக பெருமையை பெற்றுள்ளார். கடந்த மாதம் பாஜகவில் இணைந்த அடுத்த நாளே இவருக்கு வேட்பாளர் சீட் வழங்கப்பட்ட நிலையில் அரசியலில் பிரவேசித்த ஒரே மாதத்தில் MLA-கவும் ஆகியுள்ளார்.
84,915 வாக்குகள் பெற்று இவரை எதிர்த்து போட்டியிட்டவரை 11,730 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். மைதிலி தாக்கூர், சிறுவர்களுக்கான பாட்டும் பாடும் ரியாலிட்டி ஷோ மூலம் சிறு வயதிலேயே மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்த நிலையில், MLA மைதிலி தாகூர், தமிழில் பாடிய “கண்ணான கண்ணே’ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
