பீகார் : ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் என்ற வேட்பாளருக்காக துலார்சந்த் யாதவ் (75) என்பவரை வாக்குகள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது நடந்த மோதல் ஒன்றில் துலார்சந்த் யாதவ் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் கைது செய்யப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் ஆனந்த் குமார் சிங் 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
