பாவம் சார் என் மருமகள்! ஐந்து மாத கர்ப்பிணி! அவ பாவம் யாரையும் சும்மா விடாது சார்! என் மகன் வேறு ஒரு பெண்ணுடன் ஓடிட்டான் தயவு செய்து கண்டுபிடிச்சு தாங்க சார் ! கதறி அழுது கண்ணீர் விட்ட தாய்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியைச் சேர்ந்த சம்சுதீன் மகள் பானு (25) என்பவர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டை அடுத்த ஜெய மாதா தெரு பகுதியை சேர்ந்த செல்வம் மற்றும் ஜமீலா தம்பதியினரின் மகனான ரஞ்சித் குமார் (23) என்ற நபரை திருமணம் செய்து உள்ளார்.
இவர் ஓசூர் பகுதியில் உள்ள டிவிஎஸ் கம்பெனியில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 10 ஆம் தேதி ஓசூரில் வேலைக்கு செல்வதாக வீட்டில் மணைவியிடம் கூறி சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ரஞ்சித் குமார் ஜோலார்பேட்டையைச் சார்ந்த ஒரு பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி ஓடி சென்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் தந்தை பானு வீட்டிற்கு வந்து உனது கணவன் எனது பெண்ணை கடத்தி சென்றுள்ளார் என ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
இதனால் ரஞ்சித் குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீட்டை விட்டு வெளியேறி 40 நாட்களுக்கு மேலாகியும் ரஞ்சித் குமார் எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை என்று கூறி குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்தனர்.
மேலும் ரஞ்சித் குமாரின் தாயாரான ஜமீலா எனது மருமகள் ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார். அவருடைய பாவம் யாரையும் சும்மா விடாது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை தயவுசெய்து என்னுடைய மகனை கண்டுபிடித்து தாங்க என கதறி அழுத்த சம்பவம் அனைவரையும் கண் கலங்க செய்தது..
