நாளை (நவம்பர் 15, 2025) முதல் இந்தியாவில் புதிய ஃபாஸ்டாக் விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் இதற்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பு முறையை மேம்படுத்துவதே புதிய விதிகளின் நோக்கம்.
உதாரணமாக, ₹100 சுங்கத்திற்கு ஃபாஸ்டாக்கு இல்லாத வாகனம் ₹200 செலுத்த வேண்டும், ஆனால் யுபிஐ முறையில் ₹125 செலுத்துவது போதும்.
இந்த மாற்றம் ரொக்க பண பரிவர்த்தனைகளை குறைத்து, டிஜிட்டல் முறைகளுக்கு ஊக்குவிப்பதாகும். இந்த நடைமுறை மூலம் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு குறைந்து, பயணிகள் விரைவாக பயணம் செய்ய முடியும் என்றும், பரிவர்த்தனை வெளிப்படைத்தன்மை அதிகரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வருடாந்திர சுங்க பாஸ் என்பது ஒரு ப்ரீபெய்ட் வசதியாகும். இதன் மூலம் தனியார் வாகன ஓட்டிகள் ஒருமுறை கட்டணம் செலுத்தி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகளில் உள்ள 200 சுங்கச்சாவடிகள் வரை இலவசமாகப் பயணிக்கலாம். ஒவ்வொரு பாஸின் விலையும் ₹3,000 ஆகும். இந்த வசதி கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்களுக்குக் கிடைக்கிறது.
இந்த புதிய விதிகள் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை நவீனமாக்கி, பயணத்தை எளிமையாக்கும் முயற்சியாகும்.
