பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி (NDA) அதிக இடங்களில் முன்னிலை பெறுகிறது. 196 தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலை பெற்று, சுமார் 200 தொகுதிகளை அடைய உள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக, நிதிஷ் குமாரின் ₹10,000 நேரடி நலத்திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இதனால், 71% பெண்கள் வாக்களித்தனர். இது NDA வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது.
கிராமப்புறங்களில் வழங்கப்பட்ட இலவச மின்சாரம். முதியவர்களுக்கான ஓய்வூதியம் ₹400 இலிருந்து ₹1,100 ஆக உயர்த்தப்பட்டது மக்களிடையே பெரும் ஆதரவாக அமைந்தது.
முக்கியமாக அங்கே யாதவ் ஜாதியினருக்கு எதிரான வாக்குகளை மொத்தமாக பாஜக – ஜேடியூ அள்ளி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், பீகார் சட்டசபை தேர்தலில் NDA வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
