Thursday, December 25, 2025

பொது இடங்களில் இலவச Wi-Fi யூஸ் பண்றீங்களா? எச்சரிக்கும் கூகுள்

நம்மில் பலர் ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், காபி ஷாப் மற்றும் ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் கிடைக்கும் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் பழக்கம் உண்டு. இந்நிலையில் கூகுள் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த பொதுவெளி Wi-Fi வலைப்பின்னல்களின் பாதுகாப்பு குறைபாடுகள் இணைய மோசடிகளுக்கு வாய்ப்பளிக்கும் என தெரிவித்துள்ளது. இதனால்,வங்கிக் கணக்கு நுழைவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்கள் போன்றவைகளை எளிதில் திருடக்கூடும். மொபைல் மோசடிகள் அதிகரிப்பது காரணமாக பொதுவான Wi-Fi-யின் பயன்படுத்தல் மேலும் ஆபத்தானதாக மாறிவிட்டது.

முக்கியமான பணிகள், குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகள், ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் நிதி அல்லது தனிநபர்த் தகவல்களை கொண்ட கணக்குகளுக்கு இந்த பொதுவெளி Wi-Fi பயன்படுத்த கூடாது என கூகுள் கட்டாயமாக கூறியுள்ளது.

ஆகவே, பொதுவெளி Wi-Fi பயன்படுத்தும் முன் இருமுறை சிந்திக்கவும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.

Related News

Latest News