பீகார் சட்டசபைக்கு கடந்த 6 மற்றும் 11-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல்களில் மொத்தம் 67.13 சதவீத வாக்குகள் பதிவாகின. பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் NDA கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் NDA கூட்டணி 190-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
பீகார் பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் கட்சி 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து விலகுவதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருந்த நிலையில், 83 தொகுதிகளில் JDU முன்னிலையில் உள்ளது.
இந்தியா கூட்டணி 49 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பிரசாந்த் கிஷோரின் JSP ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. எனவே அவர் அரசியலில் இருந்து விலகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
