திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பழைய வத்தலகுண்டு அருகே ரமேஷ் என்பவர் வண்ண மீன்கள் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார்.
இன்று காலை விற்பனை நிலையத்தை திறக்க வந்த ரமேஷ் வண்ண மீன்கள் வளர்க்கப்படும் கண்ணாடி தொட்டி பகுதியில் மிகப்பெரிய பாம்பு ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆள் நடமாட்டத்தை உணர்ந்த அந்த பாம்பு உடனடியாக அங்கிருந்து விலகி கடையின் மேற்கூறையில் சென்று புகுந்து கொண்டது.
இதனை தொடர்ந்து ரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு வீரர்கள், வண்ண மீன்கள் விற்பனை நிலையத்தின் மேற்கூரையில் பதுங்கி இருந்த பாம்பினை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
சுமார் 6 அடி நீளம் கொண்ட அரிய வகை கோதுமை நாகப் பாம்பினை உயிருடன் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள் அதனை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிகள் கொண்டு விட்டனர்.
