புதுச்சேரி மாநிலத்தில் நாளை 15ம் தேதி தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி (டெட்) தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, புதுச்சேரியை சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். அதனால், நாளை 15ம் தேதி விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனையேற்று, நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக வரும் ஜனவரி 3ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று, புதன்கிழமை கால அட்டவணைப்படி வகுப்பகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
