Saturday, December 27, 2025

மூக்கில் ரத்தக்கசிவு : சிக்கிம் மாநில முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

சிக்கிம் மாநில முதல்வர் பிரேம்சிங் தமாங்கிற்கு மூக்கில் திடீரென ரத்த கசிவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. முதலமைச்சர் கலந்து கொண்ட இசைப் போட்டியின் இறுதிப் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்தது.

இதையடுத்து அவர் உடனடியாக மருத்து சிகிச்சைக்காக கேங்டாக்கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவரது மூத்த மகனும் எம்.எல்.ஏ.வுமான ஆதித்யா தெரிவித்தார்.

முதலமைச்சரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News