Saturday, December 27, 2025

டெல்லி குண்டுவெடிப்பு : உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கள்கிழமை நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தற்கொலைத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியவர் ஃபரிதாபாத்தில் பணிபுரியும் மருத்துவர் உமர் நபி என்பது டிஎன்ஏ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் புல்வாமாவில் உமர் நபியில் சொந்த கிராமத்தில் உள்ள அவரது வீட்டைப் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளனர்.

Related News

Latest News