Monday, January 26, 2026

நாட்டாமை படத்துல என்ன சாதி இருக்கு? – நடிகர் சரத்குமார் கேள்வி

நடிகரும், பாஜக பிரமுகருமானவர் சரத்குமார். இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசியது; முந்தைய காலகட்டத்தில் எஜமான், தேவர் மகன், நாட்டாமை போன்ற சாதிய திரைப்படங்கள் மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், தற்போது சாதிக்கு எதிரான பைசன் போன்ற திரைப்படங்கள் வருகிறது. இதனை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதில் அளித்த சரத்குமார், “நாட்டாமை திரைப்படம் சாதிய படம் கிடையாது. அது ஒரு பஞ்சாயத்துத் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நல்ல மனிதர் கதை.

அதே போல் தேவர் மகன் திரைப்படம் அந்த பகுதியில் படம் எடுத்ததால் தேவர் மகன் என்று பெயர் வைத்தார்கள். இது எல்லாம் என்ட்டர்டெய்ன்மெண்ட் தான். பைசன் படம் சாதியை பற்றிய படமில்லை. ஹாலிவுட் திரைப்படங்களில் கூட கருப்பின மக்களின் துன்பங்களை பற்றி பேசுகிறார்கள். அதனால் பழைய காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது, அது நடக்கக்கூடாது என்று திரைப்படம் எடுப்பது தவறில்லை” என்று தெரிவித்தார்.

Related News

Latest News