Saturday, December 27, 2025

டெல்லியில் மீண்டும் ஏற்பட்ட பலத்த சத்தம்., பீதியடைந்த மக்கள் : என்ன நடந்தது?

தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல் என மத்திய அரசு அறிவித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை மஹிபால்பூர் பகுதியில் உள்ள ராடிசன் ஹோட்டலுக்கு அருகே திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

இதையடுத்து, போலீசாரும் தீயணைப்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். இதையடுத்து நடத்தபட்ட விசாரணையில் டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து அந்த வழியாகச் சென்றபோது பின்புற டயர் வெடித்து பலத்த சத்தம் ஏற்பட்டது என்று தெரியவந்தது.

Related News

Latest News