திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உடன் பிறப்பே வா’ என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன் பிறப்பே வா’ நிகழ்ச்சியில் போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத்தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் என்று கட்சியினரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
