நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஊருக்கு வெளியே உள்ள வயல்வெளிக்கு சென்றனர். அங்கு அவர்கள், கைகளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு, தங்களை பெரிய ரவுடிகள் போல சித்தரித்து வசனங்கள் பேசி வீடியோ எடுத்துள்ளனர். பின்னர், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்ஆக பதிவேற்றியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் கூடிய இந்த வீடியோ வேகமாக பரவியதை அடுத்து, இது நெல்லை டவுன் போலீசாரின் கவனத்திற்குச் சென்றது.பின்னர் இளைஞர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அருள், முருகராஜ், மற்றும் சொக்கலிங்கம் ஆகிய 3 பேர் தான் வீடியோ வெளியிட்டது கண்டுபிடிக்கபட்ட நிலையில் அவரகள் கைது செய்யப்பட்டனர்.இது போன்று செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
