உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து ஒரு வயதான பெண் பிரசவ வலியில் இருந்த தனது மருமகளை கேலி செய்வதைக் காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை பிரயாக்ராஜில் உள்ள நாஸ் மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் நாஸ் பாத்திமா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்தவீடியோவில் இளம் பெண் ஒருவர் மருத்துவமனை படுக்கையில் படுத்திருப்பதையும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்திருப்பதையும் காட்டுகிறது. அதில் அந்த பெண்ணின் மாமியார் இயற்கையான பிரசவத்தைத் தேர்வு செய்ய மாமியார் கட்டாயப்படுத்துவதைக் காட்டுகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
