புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே உள்ள அம்மா சத்திரத்தில், சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. விமானத்தின் பாகம் சேதமடைந்ததால் அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானி சாதுரியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சிறிய ரக விமானம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. சென்னைக்கு செல்வதற்காக விமானம் வந்தபோது விமானத்தின் ஒரு இறக்கை உடைந்து விட்டதாக கூறப்படுகிறது
இந்த சிறிய ரக விமானத்தில் ஒரே ஒரு பைலட் மட்டும் தான் இருந்துள்ளார். விமானத்தை திருச்சி ஏர்போர்ட்டுக்கு பாதுகாப்பாக தரையிறக்கி விடலாம் என்று சென்றதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டை – திருச்சி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று திடீரென சாலையில் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்
